இந்தியாவின் முதல் UPI தானியங்குப் பண வழங்கீட்டு இயந்திரம்
September 10 , 2023 441 days 297 0
ஹிட்டாச்சி பண வழங்கீட்டு சேவை நிறுவனமானது இந்திய தேசியப் கொடுப்பனவுக் கழகத்துடன் இணைந்து இந்தியாவில் முதல் முறையாக ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுக வழியான தானியங்குப் பண வழங்கீட்டு இயந்திரத்தினை (UPI-ATM) அறிமுகப் படுத்தியுள்ளது.
UPI-ATM சேவையானது, இயங்குதன்மை மாற்ற அட்டை பயன்பாடு அற்ற பணம் எடுப்பு (ICCW) சேவை என்றும் அழைக்கப் படுகிறது.
இது ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகத்தினைப் பயன்படுத்தும் வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு UPI-ATM செயல்பாட்டினைக் கொண்டிருக்கும் எந்தவொரு தானியங்கு பண வழங்கீட்டு இயந்திரத்திலிருந்தும் பணத்தை எடுக்கச் செய்வதற்கு ஏதுவான வழியை வழங்குகிறது.
வழக்கமான ஒரு அட்டையின் தேவை இல்லாமல் இந்த தானியங்குப் பண வழங்கீட்டு இயந்திரங்களைப் பயன்படுத்தலாம்.