TNPSC Thervupettagam

இந்தியாவின் முன்னணி எண்ணெய் வழங்குநர்

March 8 , 2018 2453 days 765 0
  • நடப்பு நிதியாண்டில் இந்தியாவின்  கச்சா எண்ணெய் தேவையில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் அதிகமான அளவு எண்ணெய்யை இந்தியாவிற்கு  ஏற்றுமதி செய்துள்ளதன் மூலம் சவூதி அரேபியாவை பின்னுக்குத் தள்ளி இந்தியாவிற்கான முன்னணி எண்ணெய் ஏற்றுமதியாளர் என்ற இடத்தை ஈராக் அடைந்துள்ளது.
  • தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஈரான் இந்தியாவிற்கு அதிகளவு எண்ணெய் விநியோகிக்கும் மூன்றாவது நாடாக உள்ளது. வெனிசுலாவானது இந்தியாவிற்கு அதிகளவு எண்ணெய் வழங்கும் 4வது நாடாகும்.
  • அதற்கடுத்த இடத்தில் நைஜீரியா உள்ளது.
  • இந்தியா தன்னுடைய கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதத்தை இறக்குமதி மூலம் அடைகின்றது.
  • நெடுங்காலமாக சவூதி அரேபியா இந்தியாவிற்கு முதன்மை எண்ணெய் வழங்குநராக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
  • நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலத்தில் மேற்காசியாவிலிருந்தான இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி சார்பு நிலை 58 சதவீதத்திலிருந்து (2014-15)7 சதவீதமாக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்