இந்திரா காந்தி தேசிய கலை மையம் (IGNCA) ஆனது, இந்தியாவின் ‘மொழி சார் வரைபடத்தினை’ உருவாக்குவதற்காக வேண்டி நாடு முழுவதும் மொழிவாரியான கணக்கெடுப்பினை நடத்துவதற்கு முன்மொழிந்துள்ளது.
இந்தியாவில் எத்தனை மொழிகள் எந்தெந்த மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களில் பேசப்படுகின்றன என்பது குறித்த கணக்கெடுப்பினை மேற்கொள்வதை இது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
IGNCA என்பது மத்தியக் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.
இந்தியாவில் 22 மொழிகள் அலுவல் மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதோடு, அவை இந்திய அரசியலமைப்பின் 8 வது அட்டவணையின் ஒரு பகுதியாகும்.
மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்திய மக்கள்தொகையில் 97% பேர் இந்த மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியைப் பேசுபவர்களாக உள்ளனர்.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, பட்டியலிடப்படாத 99 மொழிகள் கூடுதலாக இந்தக் கணக்கெடுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.
சுமார் 37.8 மில்லியன் மக்கள் இந்த பட்டியலிடப்படாத மொழிகளில் ஒன்றைத் தங்கள் தாய் மொழியாக கொண்டுள்ளனர்.
1971 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஒரு மொழியைப் பேசுபவர்களின் எண்ணிக்கை 10,000க்கும் குறைவாக இருந்தால் அந்த மொழிகளைக் கணக்கெடுப்பில் சேர்க்கக் கூடாது என்று மேற்கொள்ளப்பட்ட முடிவின் காரணமாக 1.2 மில்லியன் மக்களின் தாய்மொழிக் கணக்கெடுப்பில் பதிவு செய்யப் படாமல் உள்ளது.
1961 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 1,554 மொழிகள் பேசப் பட்டன.