TNPSC Thervupettagam

இந்தியாவின் விசில் கிராமம்

April 14 , 2023 463 days 237 0
  • மாநிலங்களவை உறுப்பினர் ராகேஷ் சின்ஹா, மேகாலயாவில் உள்ள கோங்தாங் கிராமம் குறித்த தனது மேம்பாட்டு அறிக்கையினை தாக்கல் செய்துள்ளார்.
  • கோங்தாங், மேகாலயாவில் உள்ள கிழக்கு காசி மலையில் அமைந்துள்ளது.
  • 'ஜிங்ர்வாய் லாபே' என்ற தனித்துவமானப் பாரம்பரியத்தின் காரணமாக இது 'விசில் கிராமம்' என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது.
  • ஒரு குழந்தை பிறந்தவுடன், அதனுடைய தாய் அந்தக் குழந்தைக்கென ஒரு தனித்துவமான ராகத்தினை உருவாக்குகிறார்.
  • அந்த ராகமானது அக்குழந்தையின் பெயராகச் சூட்டப்படுகிறது.
  • இந்த தனித்துவமானப் பெயர்களைத் தாய்மார்கள் மட்டுமே தங்கள் குழந்தைகளுக்கு வைக்க முடியும்.
  • காங்தாங் கிராம மக்களான செங் என்பவர் காசி பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதோடு அவர்கள் காசி மொழியினைப் பேசுகின்றனர்.
  • 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தக் கிராமத்தின் மக்கள் தொகை 567 ஆகும்.
  • இந்த 567 பேரில், 275 ஆண்கள் மற்றும் 275 பெண்கள் ஆவர் என்பதோடு, அந்தக் கிராமத்தின் கல்வியறிவு விகிதம் 55% ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்