2040 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் விமானப் போக்குவரத்து ஆண்டிற்கு ஏறக் குறைய 7 சதவீதம் அதிகரிக்கும் என்று விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங் நிறுவனம் கணித்துள்ளது.
தென்கிழக்கு ஆசியச் சந்தையின் வளர்ச்சி 5.5 சதவீதம், சீனா (5.4 சதவீதம்), ஆப்பிரிக்கா (5.4 சதவீதம்) மற்றும் லத்தீன் அமெரிக்கா (4.8 சதவீதம்) என மதிப்பிடப் பட்டுள்ளது.
இந்தியா தற்போது வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் ஒன்றாகும்.
தற்போது, பட்டியலிடப்பட்ட இரண்டு இந்தியச் சரக்கு விமான நிறுவனங்களான ஸ்பைஸ் ஜெட் மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவை போயிங் சரக்கு விமானங்களைப் பயன்படுத்துகின்றன.