TNPSC Thervupettagam

இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் - மார்ச் 2022

September 7 , 2022 810 days 505 0
  • நிதி அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் தொகையானது ஆண்டிற்கு 8.2 சதவீதம் அதிகரித்து 620.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.
  • அதில் 53.2 சதவீதம் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • 31.2 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ள இந்திய ரூபாய் மதிப்பிலானக் கடனானது இரண்டாவது பெரிய மதிப்பீடாக உள்ளது.
  • மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெளிநாட்டுக் கடன் விகிதம் 19.9 சதவீதமாக உள்ள நிலையில் வெளிநாட்டுக் கடன் மற்றும் கையிருப்பு விகிதம் 97.8 சதவீதமாக இருந்தது.
  • நீண்ட காலக் கடன் ஆனது மொத்த அளவில் 80.4% ஆக மொத்தம் 499.1 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.
  • குறுகிய கால கடன் ஆனது மொத்த அளவில் 19.6% ஆக மொத்தமாக 121.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.
  • சர்வதேச நாணய நிதியம் (IMF) ஆனது, 2021-22 ஆம் ஆண்டில், சிறப்பு வரைவு உரிமைகள் (SDR) மூலம் கூடுதல் ஒதுக்கீடு செய்ததன் காரணமாக, அரசின் இறையாண்மைக் கடன் ஆண்டிற்கு 17.1% அதிகரித்து 130.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.
  • 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் இறுதிக் கட்ட நிலவரப்படி அரசின் இறையாண்மை சாராதக் கடன் 6.1% அதிகரித்து 490.0 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.
  • வணிகக் கடன்கள், வெளிநாடு வாழ் இந்தியர்களின் வைப்புத் தொகைகள் மற்றும் குறுகிய கால வர்த்தகக் கடன் ஆகியவை மொத்த அளவில் 95.2 சதவீதம் வரை உள்ளது.
  • வெளிநாடு வாழ் இந்தியர்களின் வைப்புத் தொகைகள் 2% குறைந்து 139.0 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ள நிலையில், வணிகக் கடன்கள் (209.71 பில்லியன் டாலர்கள்) மற்றும் குறுகிய கால வர்த்தகக் கடன் (117.4 பில்லியன் டாலர்கள்) ஆகியவை முறையே 5.7% மற்றும் 20.5% அதிகரித்துள்ளன.
  • முந்தைய ஆண்டில் 8.2 சதவீதமாக இருந்த கடன் சேவை விகிதமானது 2021-22 ஆம் ஆண்டில் மிதமான நடப்பு வருவாய்கள் மற்றும் வெளிப்புறக் கடன் சேவை வழங்கீடுகளைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் குறிப்பிடத் தக்க அளவில் 5.2 சதவீதமாகக் குறைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்