TNPSC Thervupettagam

இந்தியாவின் வெளிநாட்டுக் கடன்

July 11 , 2023 502 days 324 0
  • இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ஆனது, 2023 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில், 5.6 பில்லியன் டாலர் அதிகரித்து 624.7 பில்லியன் டாலராக இருந்தது.
  • முந்தைய ஆண்டில் 20% ஆக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெளிநாட்டுக் கடன் விகிதம் ஆனது மார்ச் மாத இறுதியில் 18.9% ஆகக் குறைந்துள்ளது.
  • நாட்டின் நிகர வெளிநாட்டுச் சொத்து மதிப்பு மாற்றங்களைத் தவிர்த்து 2022 ஆம் ஆண்டு மார்ச் இறுதியில் 5.6 பில்லியன் டாலராக இருந்த வெளிநாட்டுக் கடன் ஆனது 2023 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் 26.2 பில்லியன் டாலராக அதிகரித்தது.
  • 2022 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் 19.7 சதவீதமாக இருந்த மொத்த வெளிநாட்டுக் கடனில் குறுகிய காலக் கடனின் பங்கு (ஒரு வருடம் வரை) ஆனது 2023 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் 20.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.
  • 2023 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் இந்தியாவின் வெளிநாட்டுக் கடனில் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடன் ஆனது 54.6 சதவீத பங்குடன் மிகப்பெரிய அங்கமாக இருந்தது.
  • அதைத் தொடர்ந்து இந்திய ரூபாய் (29.8 சதவீதம்), ஐஎம்எப்-சிறப்பு நிதி (6.1 சதவீதம்), யென் (5.7 சதவீதம்), யூரோ (3.2 சதவீதம்) ஆகியவற்றின் மதிப்பிலான கடன்கள் உள்ளன.
  • 32.5 சதவீதப் பங்குகளுடன், வெளிநாட்டுக் கடனின் மிகப்பெரிய அங்கமாக கடன்கள் உள்ளன.
  • அதைத் தொடர்ந்து நாணயம் மற்றும் வைப்புத் தொகை (22.6 சதவீதம்), வர்த்தகக் கடன் மற்றும் முன்பணம் (19.9 சதவீதம்) மற்றும் கடன் பத்திரங்கள் ஆகியவை உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்