இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ஆனது, 2023 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில், 5.6 பில்லியன் டாலர் அதிகரித்து 624.7 பில்லியன் டாலராக இருந்தது.
முந்தைய ஆண்டில் 20% ஆக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெளிநாட்டுக் கடன் விகிதம் ஆனது மார்ச் மாத இறுதியில் 18.9% ஆகக் குறைந்துள்ளது.
நாட்டின் நிகர வெளிநாட்டுச் சொத்து மதிப்பு மாற்றங்களைத் தவிர்த்து 2022 ஆம் ஆண்டு மார்ச் இறுதியில் 5.6 பில்லியன் டாலராக இருந்த வெளிநாட்டுக் கடன் ஆனது 2023 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் 26.2 பில்லியன் டாலராக அதிகரித்தது.
2022 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் 19.7 சதவீதமாக இருந்த மொத்த வெளிநாட்டுக் கடனில் குறுகிய காலக் கடனின் பங்கு (ஒரு வருடம் வரை) ஆனது 2023 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் 20.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் இந்தியாவின் வெளிநாட்டுக் கடனில் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடன் ஆனது 54.6 சதவீத பங்குடன் மிகப்பெரிய அங்கமாக இருந்தது.
அதைத் தொடர்ந்து இந்திய ரூபாய் (29.8 சதவீதம்), ஐஎம்எப்-சிறப்பு நிதி (6.1 சதவீதம்), யென் (5.7 சதவீதம்), யூரோ (3.2 சதவீதம்) ஆகியவற்றின் மதிப்பிலான கடன்கள் உள்ளன.
32.5 சதவீதப் பங்குகளுடன், வெளிநாட்டுக் கடனின் மிகப்பெரிய அங்கமாக கடன்கள் உள்ளன.
அதைத் தொடர்ந்து நாணயம் மற்றும் வைப்புத் தொகை (22.6 சதவீதம்), வர்த்தகக் கடன் மற்றும் முன்பணம் (19.9 சதவீதம்) மற்றும் கடன் பத்திரங்கள் ஆகியவை உள்ளன.