முந்தைய ஆண்டில் 3.6% ஆக இருந்த இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை விகிதம் ஆனது 2023 ஆம் ஆண்டில் 3.1% ஆகக் குறைந்துள்ளது.
வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைவதற்கு நகர்ப்புற வேலைவாய்ப்பின்மையில் பதிவான குறைவு ஒரு குறிப்பிடத் தக்க காரணம் ஆகும்.
நகர்ப்புறங்களில், 2022 ஆம் ஆண்டில் 5.7 சதவீதமாகவும், 2021 ஆம் ஆண்டில் 6.5 சதவீதமாகவும் இருந்த ஒட்டு மொத்த வேலைவாய்ப்பின்மை விகிதம் ஆனது 2023 ஆம் ஆண்டில் 5.2 சதவீதமாகக் குறைந்துள்ளது.
கிராமப்புறங்களில், 2022 ஆம் ஆண்டில் 2.8 சதவீதமாகவும், 2021 ஆம் ஆண்டில் 3.3 சதவீதமாகவும் இருந்த ஒட்டு மொத்த வேலைவாய்ப்பின்மை விகிதம் ஆனது 2023 ஆம் ஆண்டில் 2.4 சதவீதமாகக் குறைந்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் 3.3 சதவீதமாகவும், 2021 ஆம் ஆண்டில் 3.4 சதவீதமாகவும் இருந்த பெண்களின் வேலைவாய்ப்பின்மை விகிதம் ஆனது 2023 ஆம் ஆண்டில் 3 சதவீதமாகக் குறைந்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் 3.7 சதவீதமாகவும், 2021 ஆம் ஆண்டில் 4.5 சதவீதமாகவும் இருந்த ஆண்களின் வேலைவாய்ப்பின்மை விகிதமானது 2023 ஆம் ஆண்டில் 3.2 சதவீதமாகக் குறைந்துள்ளது.