TNPSC Thervupettagam

இந்தியாவின் வேலைவாய்ப்பு நிலை 2023

September 26 , 2023 300 days 222 0
  • அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் நிலையான வேலைவாய்ப்புக்கான மையமானது ‘இந்தியாவின் வேலைவாய்ப்பு நிலை 2023’ என்ற அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • 2017-18 ஆம் ஆண்டில் 8.7 சதவீதமாக இருந்த ஒட்டு மொத்த வேலைவாய்ப்பின்மை விகிதம் ஆனது 2021-22 ஆம் ஆண்டில் 6.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.
  • ஆனால், 2021-22 ஆம் ஆண்டில் இந்தியாவின் 25 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளில் 42 சதவீதத்திற்கும் அதிகமானோர் வேலையில்லாமல் இருந்தனர்.
  • 2021 ஆம் ஆண்டில், 22% பட்டியலிடப்பட்ட சாதியினைச் சேர்ந்த தொழிலாளர்களும், 32% பொதுப் பிரிவு தொழிலாளர்களும் வழக்கமான கூலி வேலையில் இருந்தனர்.
  • 2004 ஆம் ஆண்டில் இருந்த 86.5% என்ற அளவை விடக் குறைவாக 2018 ஆம் ஆண்டில், பட்டியலிடப்பட்ட சாதியினர்/ பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் வகுப்பினைச் சேர்ந்த சாதாரணக் கூலி வேலை செய்யும் தந்தைமார்களின் மகன்களில் 75.6% பேர் சாதாரணக் கூலி வேலை செய்யும் தொழிலாளர்களாக இருந்தனர்.
  • 2004 ஆம் ஆண்டில் 83.2% ஆக இருந்த பொதுச் சாதியினைச் சேர்ந்த சாதாரணக் கூலி வேலை செய்யும் தந்தையர்களின் மகன்களின் எண்ணிக்கையானது 2018 ஆம் ஆண்டில் 53% ஆகக் குறைந்துள்ளது.
  • 1980 ஆம் ஆண்டுகளில் இருந்து, வேளாண் சாராத துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் பங்கு ஆனது கணிசமாக அதிகரித்தது. இந்த எண்ணிக்கை 2021 ஆம் ஆண்டில் 19.8% ஆக இருந்தது.
  • 2021-2022 ஆம் ஆண்டின் நிலவரப்படி, பட்டியலிடப்பட்ட சாதியினர் பிரிவைச் சேர்ந்த 40% பெண்கள் மட்டுமே வேலைவாய்ப்பினைப் பெற்றிருந்த நிலையில் பொது சாதிப் பிரிவினைச் சேர்ந்த பெண்களில் 21% அளவில் வேலைவாய்ப்பினைப் பெற்றிருந்தனர்.
  • 2004 ஆம் ஆண்டில் 70% ஆக இருந்த இந்தியாவில் ஊதியம் பெறும் பெண் தொழிலாளர்கள் எண்ணிக்கையானது (ஆண் தொழிலாளர்களுடன் ஒப்பிடுகையில்) 76% ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்