TNPSC Thervupettagam

இந்தியாவின் 11வது அண்டார்டிக் பயணம்

February 17 , 2020 1746 days 904 0
  • தென்னாப்பிரிக்க கடல்சார் ஆய்வுக் கப்பலான எஸ்.ஏ. அகுல்ஹாஸ் கப்பலானது லூயிஸ் (மொரீஷியஸ்) துறைமுகத்திலிருந்து அண்டார்டிக் பெருங்கடலுக்கான தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது.
  • தெற்குப் பெருங்கடல் அல்லது அண்டார்டிக் பெருங்கடலுக்கான 11வது இந்தியப் பயணம் இதுவாகும்.
  • முதலாவது பயணமானது 2004 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையே நடைபெற்றது.
  • இந்தப் பயணக் குழுவினரால் வழங்கப்படும் தரவுகள் கோவாவில் உள்ள தேசியத் துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சி மையத்தின் (National Centre for Polar and Ocean Research - NCOPR) மூலம் ஆய்வு செய்யப்பட இருக்கின்றது.
    • NCOPR ஆனது மத்தியப் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றது.
  • தற்போது, இந்த ஆய்வுக் கப்பலானது “பாரதி” நிலையத்தின் அருகில் பிரிட்ஸ் விரிகுடாவில் உள்ளது.
    • அண்டார்டிகாவில் அமைந்துள்ள இந்தியாவின் மூன்றாவது ஆய்வு நிலையம் பாரதி ஆகும்.
  • மற்ற இரண்டு ஆய்வு நிலையங்கள் தக்சின் கங்கோத்ரி மற்றும் மைத்ரி ஆகியவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்