TNPSC Thervupettagam

இந்தியாவின் 2017 ஆம் ஆண்டின் சுற்றுப்புற இரைச்சல் அளவு அறிக்கை

October 9 , 2018 2240 days 736 0
  • இந்தியாவின் 2017 ஆம் ஆண்டின் சுற்றுப்புற இரைச்சல் அளவு அறிக்கையின்படி டெல்லியானது மிகவும் இரைச்சல் மிகுந்த பெருநகரமாக உள்ளது. இதனைத் தொடர்ந்து கொல்கத்தா, பெங்களூரு மற்றும் சென்னை ஆகியவை இடம் பிடித்துள்ளன.
  • இது மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் (CPCB - Central Pollution Control Board) வெளியிடப்பட்ட அறிக்கையாகும்.
  • தேசிய சுற்றுச்சூழல் கொள்கை (NEP - National Environment Policy) 2006-ன்படி, சுற்றுச்சூழல் தர அளவுருவாக சுற்றுப்புற இரைச்சலும் சேர்க்கப்பட்டு குறிப்பிட்ட நகர்ப்புற பகுதிகளில் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.
  • இதனால், CPCB ஆனது தேசிய சுற்றுப்புற இரைச்சல் கண்காணிப்பு அமைப்பு திட்டத்தை உருவாக்கியுள்ளது. இது இரைச்சல் கண்காணிப்பு நிலையங்களை இந்தியா முழுவதும் நிறுவுதலை உள்ளடக்கியது ஆகும்.
  • பெங்களூரு, சென்னை, டெல்லி, ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ மற்றும் மும்பை ஆகிய நகரங்கள் இதில் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்