ஜூலை 01 ஆம் தேதி முதல் மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வந்ததையடுத்து, இந்தியா தனது குற்றவியல் நீதி முறையை முற்றிலுமாக மாற்றி அமைத்துள்ளது.
இந்தியத் தண்டனைச் சட்டத்திற்கு (IPC) மாற்றாக பாரதீய நியாய சன்ஹிதா (BNS) கொண்டு வரப்பட்டுள்ளது.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்கு (CrPC) மாற்றாக பாரதீய நாக்ரிக் சுரக்சா சன்ஹிதா (BNSS) கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தியச் சாட்சியச் சட்டத்திற்கு மாற்றாக பாரதீய சாக்சய ஆதினியம் (BSA) கொண்டு வரப்பட்டுள்ளது.
மூன்று சட்டங்களும் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டன.
இந்த மூன்று புதிய சட்டங்கள் ஆனது, தண்டனை வழங்குவதை விட நீதி வழங்குவதன் மீது கவனம் செலுத்துகின்றன மற்றும் விரைவான நீதியை வழங்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளன.
இது "அனைவருக்கும் நீதி கிடைக்கப் பெறுதல்" என்பதை வலியுறுத்தும் வகையில் நீதித்துறை மற்றும் நீதிமன்ற நிர்வாக அமைப்பை வலுப்படுத்துகிறது.
இந்தப் புதிய சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படும் முதல் வழக்கு மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள நிஷாத்புரா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.