TNPSC Thervupettagam

இந்தியாவின் 48-வது சர்வதேச திரைப்பட திருவிழா

November 29 , 2017 2581 days 912 0
  • கோவாவின் பனாஜியில் இந்தியாவின் 48-வது சர்வதேச திரைப்பட திருவிழா நடத்தப்பட்டது.
  • மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம், திரைப்பட திருவிழா இயக்குநரகம் மற்றும் கோவா அரசு ஆகியவற்றின் கூட்டிணைவு மூலம் இந்த திருவிழா நடத்தப்பட்டது.
  • இத்திருவிழாவில் இந்த ஆண்டின் மதிப்புமிக்க இந்திய திரையுலக ஆளுமை விருது (Indian Film Personality of the Year Award) அமிதாப் பச்சனுக்கு வழங்கப்பட்டது.
  • வாழ்நாள் சாதனையாளர் விருது கனடா நாட்டின் இயக்குநரான அடோம் எகோயனுக்கு வழங்கப்பட்டது.
  • சிறப்பு நடுவர் பரிசு “டேக் ஆஃப்” என்ற மலையாளத் திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.
  • ராபின் கம்புல்லோவால் இயக்கப்பட்ட “120 பீட்ஸ் பர் மினிட்” (120 Beats Per Minute) என்ற பிரெஞ்ச் படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான விருது வழங்கப்பட்டது.
  • அர்ஜென்டீனிய நடிகர் நஹியூயல் பெரேஸ் பிஸ்காவர்டுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.
  • சிறந்த நடிகைக்கான விருது இந்திய நடிகை பார்வதிக்கு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்