பாதுகாப்பு அமைச்சகம் (MoD) ஆனது, 346 பாதுகாப்புப் பொருட்களை உள்ளடக்கிய ஐந்தாவது சாதகமான உள்நாட்டு தயாரிப்புகளின் கொள்முதல் பட்டியலை (PIL) அறிவித்துள்ளது.
இது பாதுகாப்புத் துறை உற்பத்தியில் ஆத்ம நிர்பர்தா (தன்னிறைவு) நிலையினை மேம்படுத்துவதனையும், பாதுகாப்புத் துறை சார் பொதுத்துறை நிறுவனங்கள் (DPSU) மேற்கொள்ளும் இறக்குமதியைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சகம் ஆனது 2020 ஆம் ஆண்டில் ஸ்ரீஜன் என்ற இணைய தளத்தினை அறிமுகப் படுத்தியது.
தனியார் தொழிற்சாலைகளுக்கு உள்நாட்டுமயமாக்கலுக்கான பாதுகாப்புப் துறை சார்ந்தப் பொருட்களை வழங்குவதற்காக பாதுகாப்புத் துறை சார் பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் சேவை வழங்கீட்டுத் தலைமையகங்களுக்கான (SHQs) ஒரு தளத்தை இது வழங்குகிறது.
அவை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை நிறுவனங்கள் (MSMEs) மற்றும் புத்தொழில் நிறுவனங்களை உள்ளடக்கியது.
2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை, பாதுகாப்புத் துறை சார் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் சேவை வழங்கீட்டுத் தலைமையகங்களால் சுமார் 36,000க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பொருட்கள் உள்நாட்டுமயமாக்கலுக்காக தொழில்துறைக்கு வழங்கப் பட்டன.
அவற்றில் கடந்த மூன்று ஆண்டுகளில் 12,300க்கும் மேற்பட்ட பொருட்கள் உள்நாட்டு மயமாக்கப் பட்டுள்ளன.