TNPSC Thervupettagam

இந்தியாவின் 51வது தலைமை நீதிபதி

November 13 , 2024 12 days 69 0
  • குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவிற்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
  • அவர் ஆறு மாதங்கள் இந்தியாவின் தலைமை நீதிபதியாகப் பணியாற்ற உள்ளார்.
  • ஏற்கனவே வருமான வரித் துறையின் மூத்த அரசுத் தரப்புச் சட்ட ஆலோசகராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
  • 2004 ஆம் ஆண்டில், அவர் டெல்லியின் தேசியத் தலைநகர் பிராந்தியத்திற்கான அரசுத் தரப்பு சட்ட ஆலோசகராக (உரிமையியல்) நியமிக்கப்பட்டார்.
  • 2005 ஆம் ஆண்டில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர் 2006 ஆம் ஆண்டில் நிரந்தர நீதிபதியானார்.
  • 2019 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் தேதியன்று, நீதிபதி கண்ணா அவர்கள், முன்னதாக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றாத நிலைமையிலேயே உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்