TNPSC Thervupettagam

இந்தியாவின் 75 வட்டாரப் பறவை இனங்கள்

August 9 , 2023 346 days 399 0
  • பறவை இனங்கள் காணப்படும் உயிரி சார்-புவியியல் பகுதிகள், அவற்றின் வளங் காப்பு நிலை, வரலாற்றுத் தொடர்பு, கிளையினங்களில் உள்ள வேறுபாடுகள், தனித் தன்மைகள் மற்றும் பறவைகளின் விருப்பமிகு வாழ்விடங்கள் பற்றிய விவரங்களை இது வழங்குகிறது.
  • 78 இனங்களில் மூன்று இனங்கள் கடந்த சில தசாப்தங்களாகப் பதிவு செய்யப் பட வில்லை.
  • சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்தின் (IUCN) அருகும் நிலையில் உள்ள உயிரினங்களின் செந்நிறப் பட்டியலில் அவை குறிப்பிடப்பட்டுள்ளன.
  • அவையாவன;
  • மணிப்பூர் புதர் காடை, 1907 ஆம் ஆண்டில் இது கடைசியாக தென்பட்டதையடுத்து ‘அருகிய நிலையில் உள்ள இனமாக’ பட்டியலிடப்பட்டது;
  • இமாலயக் காடை, 1876 ஆம் ஆண்டில் கடைசியாக தென்பட்டதையடுத்து ‘மிக அருகிய நிலையில் உள்ள இனமாக’ இது பட்டியலிடப் பட்டது;
  • ஜெர்டனின் கல்குருவி, 2009 ஆம் ஆண்டில் கடைசியாக தென்பட்டதையடுத்து ‘மிக அருகிய நிலையில் உள்ள இனமாக’ இது பட்டியலிடப்பட்டது.
  • 28 பறவை இனங்களுடன், மேற்குத் தொடர்ச்சி மலையில் அதிக எண்ணிக்கையிலான வட்டாரப் பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  • மலபார் சாம்பல் நிற இருவாட்சி, மலபார் நீலப் பைங்கிளி, அஷாம்பு சிரிப்பான் மற்றும் வெள்ளை-வயிறு கொண்ட சோலக்கிளி ஆகியவை நாட்டின் உயிரி-புவியியல் சார்ந்த ஒரு முக்கியப் பகுதியான மேற்கு தொடர்ச்சி மலைகளில் பதிவு செய்யப் பட்டு உள்ளன.
  • 25 பறவை இனங்கள் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் மட்டுமே காணப் படுகின்றன.
  • நிக்கோபார் மெகாபோட், கொண்டை பாம்புண்ணிக் கழுகு, அந்தமான் கிரேக் மற்றும் அந்தமான் பார்ன் ஆந்தை ஆகியவை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் மட்டுமே காணப்படுகின்றன.
  • நான்கு வகையான பறவை இனங்கள் கிழக்கு இமயமலையிலும், தெற்கு தக்காணப் பீடபூமிப் பகுதியிலும் மற்றும் மத்திய இந்தியக் காடுகளிலும் தலா ஒரு இனங்கள் காணப் படுகின்றன.
  • 78 உள்ளூர்(வட்டார) இனங்களில், 25 சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்தினால் ‘அச்சுறுத்தல் நிலையில் உள்ள இனங்களாக’ வகைப்படுத்தப்பட்டுள்ளன.
  • மூன்று இனங்கள் (பூகுன் பாடும் பறவை; இமாலயக் காடை; ஜெர்டன் கல்குருவி) ‘மிக அருகிய நிலையில் உள்ள இனங்களாக’ பட்டியலிடப்பட்டுள்ளன.
  • இந்தியாவில் உள்ள வட்டாரப் பறவை இனங்களில் ஐந்து இனங்கள் ‘அருகி வரும்’ இனங்கள் ஆகவும், 17 ‘எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனங்களாவும்’, 11 இனங்கள் ‘அச்சுறுத்தல் நிலையை அன்மித்த இனங்களாகவும்’ சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்தின் செந்நிறப் பட்டியலில் வகைப்படுத்தப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்