ஆற்றல் மற்றும் தூய்மையான காற்று குறித்த ஆராய்ச்சி மையம் (CREA) ஆனது சமீபத்தில், இந்தியாவிற்கான ஆண்டிடை காற்றுத் தர மதிப்பீட்டினை வெளியிட்டு உள்ளது.
அசாம்-மேகாலயா எல்லையில் அமைந்துள்ள மேகாலயாவின் பைர்னிஹாட் நகரம், இந்தியாவின் மிகவும் மாசுபட்ட நகரமாக தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் மாசுபட்ட முதல் 10 நகரங்களில், ஹரியானாவில் மூன்று நகரங்களும், ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் தலா இரண்டு நகரங்களும், டெல்லி, அசாம் மற்றும் பீகார் ஆகியவற்றில் ஒவ்வொன்றும் அமைந்துள்ளன.
163 நகரங்கள் ஆனது, இந்தியாவின் வருடாந்திரத் தேசியக் சுற்றுப்புறக் காற்றுத் தர நிலைகளை (NAAQS) (40 µg/m³) மீறியுள்ளன.
அனைத்து 256 நகரங்களும் உலக சுகாதார அமைப்பின் (WHO) இந்த வருடாந்திரத் தர நிலையை (5 µg/m³) மீறியுள்ளன.
கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் முறையே 16 மற்றும் 30 நகரங்களுடன் ‘தரமான’ மற்றும் ‘திருப்திகரமான நிலை’ ஆகிய பிரிவுகளின் கீழ் அதிக எண்ணிக்கையிலான நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
'நடுத்தர நிலை' என்ற பிரிவின் கீழ் பீகாரில் அதிக எண்ணிக்கையிலான நகரங்களும் (10), மோசமான நிலை' என்ற பிரிவில் ஹரியானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தலா மூன்று நகரங்களும் இடம் பெற்றுள்ளன.
அசாமில் அமைந்துள்ள ஒரே ஒரு நகரம் மட்டுமே ‘தீவிரமான நிலை’ என்ற பிரிவின் கீழ் இடம் பெற்றுள்ளது.