வோடபோன் நிறுவனமானது தி ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றமான நிரந்தர நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான ரூ. 20,000 கோடி நிலுவைத் தொகை வழக்கில் வெற்றி பெற்றுள்ளது.
இந்திய அரசானது 2007 ஆம் ஆண்டில் வோடபோன் நிறுவனத்திடமிருந்து நிலுவை வரிகளையும் மூலதன இலாபத்தில் ரூ.7990 கோடி ரூபாயையும் வழங்குமாறு கோரியது.
வோடபோன் நிறுவனம் இது குறித்து மும்பை (பம்பாய்) உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கில் வருமான வரித் துறைக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானது.
அதன்பின், இந்நிறுவனம் இது குறித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்திய உச்சநீதிமன்றமானது 2012 ஆம் ஆண்டில் வருமான வரிச் சட்டம், 1961 எனும் சட்டத்தின் படி வோடபோன் குழுமத்தின் இடையீடு சரி என்று தீர்ப்பு வழங்கியது.
ஆனால் அதே ஆண்டில் மத்திய அரசானது இது போன்ற ஒப்பந்தங்களில் முன்தேதியிட்ட காலத்திற்கான வரி குறித்த அதிகாரங்களை வருமான வரித் துறைக்கு வழங்குவதற்காக நிதிச் சட்டத்தில் ஒரு திருத்தத்தை மேற்கொண்டது.
இந்த வழக்கு அப்பொழுது “முன்தேதியிட்ட காலத்திற்கான வரி வழக்கு” (retrospective taxation case) என்று அறியப் பட்டது.