TNPSC Thervupettagam

இந்தியாவிலேயே அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர்

March 16 , 2023 491 days 337 0
  • சுழற்பந்து வீச்சாளர் R. அஷ்வின், சாதனை நாயகர் கபில்தேவினை விஞ்சி, சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவிலேயே அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
  • இந்தியா சார்பாக 91 டெஸ்ட் போட்டிகள், 113 ஒருநாள் போட்டிகள் மற்றும் 65 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ள அஸ்வின், கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் முறையே 466, 151 மற்றும் 72 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
  • 269 சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய இவர் 689 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.
  • அனில் கும்ப்ளே, சர்வதேசக் கிரிக்கெட்டில் 401 போட்டிகளில் இந்திய அணி சார்பாக விளையாடி 953 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்திய நபர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
  • அவருக்கு அடுத்தபடியாக 707 விக்கெட்டுகளுடன் ஹர்பஜன் சிங் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்