இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI), 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை பற்று அட்டைச் சந்தையில் அதன் முன்னணி நிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இதில் பேங்க் ஆஃப் பரோடா இரண்டாவது இடத்தையும், பாங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி யூனியன் வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவை அடுத்தடுத்த இடங்களையும் பெற்றன.
கடன் அட்டைச் சந்தையில் HDFC வங்கி முதலிடத்தில் உள்ளது.
இதைத் தொடர்ந்து பாரத் ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஆர்பிஎல் வங்கி மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி ஆகியவை உள்ளன.
பாரத் ஸ்டேட் வங்கி மற்றும் HDFC வங்கி ஆகியவை கடன் அட்டைச் செலவினத்தில் சாதனையைப் படைத்துள்ளன.
PGA Labs நிறுவனம் தொகுத்தத் தரவுகளின்படி, தனியார் வங்கிகளை விட பொதுத் துறை வங்கிகள் பற்று அட்டைச் சந்தையில் அதிக சதவீதப் பங்கினைக் கொண்டு உள்ளன.
இந்த நிலைமை கடன் அட்டைச் சந்தையில் தலைகீழாக உள்ளது.