TNPSC Thervupettagam

இந்தியாவில் அட்டைச் சந்தை

September 6 , 2022 815 days 422 0
  • இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI), 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை பற்று அட்டைச் சந்தையில் அதன் முன்னணி நிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
  • இதில் பேங்க் ஆஃப் பரோடா இரண்டாவது இடத்தையும், பாங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி யூனியன் வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவை அடுத்தடுத்த இடங்களையும் பெற்றன.
  • கடன் அட்டைச் சந்தையில் HDFC வங்கி முதலிடத்தில் உள்ளது.
  • இதைத் தொடர்ந்து பாரத் ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஆர்பிஎல் வங்கி மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி ஆகியவை உள்ளன.
  • பாரத் ஸ்டேட் வங்கி மற்றும் HDFC வங்கி ஆகியவை கடன் அட்டைச் செலவினத்தில் சாதனையைப் படைத்துள்ளன.
  • PGA Labs நிறுவனம் தொகுத்தத் தரவுகளின்படி, தனியார் வங்கிகளை விட பொதுத் துறை வங்கிகள் பற்று அட்டைச் சந்தையில் அதிக சதவீதப் பங்கினைக் கொண்டு உள்ளன.
  • இந்த நிலைமை கடன் அட்டைச் சந்தையில் தலைகீழாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்