இந்தியாவில் அதிகப்படியான நைட்ரேட்டுகள் – மத்திய நிலத்தடி நீர் வாரியம்
January 4 , 2025 7 days 82 0
இந்தியா முழுவதும் 440 மாவட்டங்களில் நிலத்தடி நீரில் அதிக நைட்ரேட் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது 2017 ஆம் ஆண்டில் 359 மாவட்டங்களாக இருந்தது.
20 சதவீத மாதிரிகளில் நைட்ரேட் இருப்பு ஆனது, லிட்டருக்கு 45 மில்லிகிராம் (மி.கி./லி) என்ற அனுமதிக்கப்பட்ட நைட்ரேட் செறிவிற்கும் அதிகமாக உள்ளன.
9.04 சதவீத மாதிரிகள் பாதுகாப்பான வரம்பிற்கு மேற்பட்ட ப்ளோரைடு அளவைக் கொண்டிருந்தன.
3.55 சதவீத மாதிரிகளில் ஆர்சனிக் மாசுபாடு கண்டறியப்பட்டுள்ளன.
இராஜஸ்தான், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் சேகரிக்கப் பட்டு உள்ள 40 சதவீத மாதிரிகள் வரம்பினை விட மிக அதிக நைட்ரேட் இருப்பினைக் கொண்டதாக உள்ளன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 35.74 சதவீதம், தெலுங்கானா மாநிலத்தில் 27.48 சதவீதம், ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 23.5 சதவீதம் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் 22.58 சதவீதம் மாதிரிகளில் அதிக மாசுபாடு இருந்தது.
உத்தரப் பிரதேசம், கேரளா, ஜார்க்கண்ட் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் மிகவும் குறைந்த சதவீதத்திலான மாதிரிகளே அத்தகைய நைட்ரேட் இருப்பினைக் கொண்டு இருப்பதாகப் பதிவாகியுள்ளன.
அருணாச்சலப் பிரதேசம், அசாம், கோவா, மேகாலயா, மிசோரம் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் சேகரிக்கப்பட்ட அனைத்து மாதிரிகளும் மிகப் பாதுகாப்பான வரம்புகளுக்குள் இருந்தன.