TNPSC Thervupettagam

இந்தியாவில் அந்நியத் தொகுப்பு முதலீடுகள் மேற்கொள்வதற்கான விருப்ப மிகு நாடுகள்

July 17 , 2024 2 days 79 0
  • முதலீட்டிற்கான ஆதாரங்களாக வைக்கப்படும் பல சொத்துகளின் அடிப்படையில் அயர்லாந்திற்கு அடுத்த நிலையில் மொரீஷியஸ் தற்போது ஐந்தாவது இடத்திற்குச் சரிந்துள்ளது.
  • அந்நியத் தொகுப்பு முதலீட்டு நிறுவனங்கள் (FPIs) நிதிகளை இந்தியாவிற்கு அனுப்புவதற்கான முன்னணி இடங்களில் மொரீஷியஸ் நாடும் ஒன்றாகும்.
  • நடப்பு ஆண்டின் முதல் பாதியில் அந்நியத் தொகுப்பு முதலீடுகளுக்கான ஆதாரங்களாக வைக்கப்படும் சொத்துகளில் 26 சதவீத அதிகரிப்பு அயர்லாந்து நாட்டில் பதிவாகியுள்ளது.
  • ஒட்டு மொத்தமாக, மொரீஷியஸில் 595 அந்நியத் தொகுப்பு முதலீட்டு நிறுவனங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளதை ஒப்பிடும் போது, ​​அயர்லாந்தில் 780க்கும் அதிகமான அந்நியத் தொகுப்பு முதலீட்டு நிறுவனங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
  • மார்ச் மாதத்தில், மொரீஷியஸ் மற்றும் இந்திய அரசாங்கங்கள் இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தினை (DTAA) திருத்தியமைப்பதற்கான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்