இந்தியாவில் அந்நிய நேரடி முதலீட்டானது (FDI – Foreign Direct Investment) 2019 - 20 ஆம் ஆண்டில் 18% அதிகரித்துள்ளதன் மூலம் 73 பில்லியன் அமெரிக்க டாலர் அளவை அடைந்துள்ளது.
இது குறித்த தரவானது தொழில்துறை ஊக்குவிப்பு மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறையினால் (DPITT - Department for Promotion of Industry and Internal Trade) வெளியிடப் பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் அந்நிய நேரடி முதலீட்டில் மேற்கொள்ளப்பட்ட மிக உயரிய அதிகரிப்பு இதுவாகும்.
மொத்த FDI ஆனது 2013-14 ஆண்டிலிருந்து தற்போது வரை இருமடங்காக அதிகரித்துள்ளது. அப்போது இது 36 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
மீண்டும் ஒரு முறை சிங்கப்பூர் நாடானது மிகப்பெரிய ஒரு FDI மூலதாரமாக உருவெடுத்து உள்ளது.