இணைய சங்கேதப் பணத் தொழில்நுட்பத் தொழில்துறையானது இந்தியாவில் 2030 ஆம் ஆண்டில் 241 மில்லியன் டாலர்களையும் உலகளவில் 2026 ஆம் ஆண்டில் 2.3 பில்லியன் டாலர்களையும் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
WazirX நிறுவனத்துடன் இணைந்து நாஸ்காம் (Nasscom) நிறுவனத்தினால் தயாரிக்கப் பட்ட ‘இந்தியாவில் இணைய சங்கேதப் பணத் தொழில்துறை’ என்ற அறிக்கையில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவிலுள்ள 60%க்கும் மேற்பட்ட மாநிலங்கள் இணைய சங்கேதப் பணத் தொழில்நுட்ப ஏற்பு மாநிலங்களாக உருவாகி வருவதாக இந்த அறிக்கை கூறுகிறது.
இந்தச் சந்தையானது 2030 ஆம் ஆண்டுக்குள் 8,00,000க்கும் மேலான வேலை வாய்ப்பினை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளது.