TNPSC Thervupettagam

இந்தியாவில் இணைய முடக்கம் 2024

December 31 , 2024 59 days 134 0
  • 2024 ஆம் ஆண்டில், இந்தியாவில் கடந்த எட்டு ஆண்டுகளில் மிகவும் குறைந்த அளவு எண்ணிக்கையிலான கைபேசி இணைய முடக்க நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன.
  • கடந்த ஆண்டு 96 இணைய முடக்கம் பதிவான நிலையில் இந்த ஆண்டு இது வரையில் 60 இணைய முடக்கங்கள் மட்டும் பதிவாகியுள்ளன.
  • அரசியலமைப்பின் 370வது சரத்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 2020 ஆம் ஆண்டில் அதிக இணைய முடக்கங்கள் – அதாவது 132 என்ற அளவில் பதிவாகின.
  • அன்று அரசாங்கம் ஆனது, 2017 ஆம் ஆண்டில் சட்டத்தினைத் திருத்தியமைத்து, 2017 ஆம் ஆண்டு தொலைத்தொடர்பு சேவைகள் தற்காலிக நிறுத்த (பொது அவசரநிலை அல்லது பொதுப் பாதுகாப்பு) விதிகளை பிரகடனப்படுத்தியது.
  • மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் ஆனது, இந்தியத் தந்திச் சட்டத்தின்படி, “பொது அவசரநிலை” அல்லது “பொதுப் பாதுகாப்பு” நலன் கருதி மட்டுமே இணைய முடக்கத்தை விதிக்க முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்