TNPSC Thervupettagam

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பதப்படுத்தப்பட்ட கடல்சார் உணவுப் பொருட்கள்

March 3 , 2023 507 days 215 0
  • இந்தியாவில் இருந்து பதப்படுத்தப்பட்ட (உறைந்த) கடல்சார் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான தற்காலிகத் தடையை கத்தார் நீக்கியுள்ளது.
  • இந்த மேற்கு ஆசிய நாட்டுடனான ஒரு மேம்பட்ட ஏற்றுமதிக்கும், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கும் இது வழி வகுக்கிறது.
  • இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சில சரக்குப் பொருட்களில் விப்ரியோ காலரா பாக்டீரியாக்கள் இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியாவில் இருந்து பதப்படுத்தப்பட்ட கடல்சார் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்குத் தடை விதிக்கப் பட்டது.
  • சமீபத்தில், பாக்டீரியாவின் பரவல் கட்டுப்பாடு மீதான இந்தியாவின் உத்தரவாதத்தை ஒப்புக் கொண்டதையடுத்து, பெய்ஜிங் அரசும் இந்தியாவினைச் சேர்ந்த 99 கடல்சார் உணவுப் பதப்படுத்துதல் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு விதிக்கப் பட்ட இடைக்காலத் தடையினையும் நீக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்