TNPSC Thervupettagam

இந்தியாவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை 2023

August 7 , 2024 111 days 116 0
  • 2023 ஆம் ஆண்டில், இந்தியாவில் 18,378 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் பதிவு செய்யப் பட்டு, அதில் 42 பெறுநர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்புகளைப் பெற்ற நிலையில் இதன் விளைவாக மொத்தம் 18,336 பெறுநர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
  • உறுப்பு தானம் பெற்றவர்களில் 30% பெண்கள் ஆவர்.
  • 2023 ஆம் ஆண்டில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் சுமார் 10% ஆனது வெளிநாட்டினருக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையாகும்.
  • உறுப்பு தானம் பெற்ற 18,336 நபர்களில் 1,851 பேர் வெளிநாட்டினர் ஆவர்.
  • அதிக எண்ணிக்கையிலான இந்த உறுப்பு மாற்றுச் சிகிச்சை நடைமுறைகள் டெல்லி, ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்காளத்தில் மேற்கொள்ளப்பட்டன.
  • NOTTO தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப் பட்ட 1,851 வெளிநாட்டு மாற்று அறுவை சிகிச்சை வழக்குகளில், ஒன்பது அறுவை சிகிச்சையில் மட்டுமே உயிரிழந்தவரிடமிருந்து உறுப்புகள் பெறப்பட்டன.
  • டெல்லியில் அதிகபட்சமாக 1,445 அறுவை சிகிச்சைகளும், ராஜஸ்தானில் 116 அறுவை சிகிச்சைகளும், மேற்கு வங்காளத்தில் 88 அறுவை சிகிச்சைகளும் மேற் கொள்ளப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்