இந்தியாவில் உள்ள கிராமப்புற அரசாங்கம் குறித்த விமர்சனம்
June 16 , 2024 164 days 192 0
உலக வங்கிக் குழுமமானது இருநூற்று ஐம்பதாயிரம் மக்களாட்சி அமைப்புகள்: இந்தியாவில் உள்ள கிராமப்புற அரசாங்கங்கள் குறித்த ஓர் ஆய்வு என்ற ஒரு தலைப்பிலான கொள்கை ஆராய்ச்சி அறிக்கைத் தாளினை வெளியிட்டுள்ளது.
1992 ஆம் ஆண்டில், இந்திய அரசியலமைப்பின் 73வது சட்டத் திருத்தம் ஆனது 800 மில்லியன் குடிமக்களை உள்ளடக்கிய 250,000 கிராமப்புற மக்களாட்சி அமைப்புகளை (கிராமப் பஞ்சாயத்துகள் என அழைக்கப்படும்) உருவாக்கியது.
பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் மாநில மற்றும் தேசிய அரசாங்கங்களால் வழங்கப் படும் மானியங்களை மட்டுமே முழுவதுமாக சார்ந்துள்ளன.
சராசரியாக, ஒரு கிராமப் பஞ்சாயத்துக்கு 0.67 பஞ்சாயத்து செயலாளர்கள் மட்டுமே உள்ளனர் என்ற நிலையில் உத்தரப் பிரதேசம் போன்ற சில மாநிலங்களில் இந்த எண்ணிக்கை 0.33 ஆகக் குறைந்துள்ளது.
1992 ஆம் ஆண்டு 73வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் ஆனது பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்கி, ஒரே மாதிரியான அமைப்பு, தேர்தல்கள், இட ஒதுக்கீடு ஆகியவற்றை நிறுவியது.