TNPSC Thervupettagam

இந்தியாவில் உள்ள பனிச் சிறுத்தைகளின் நிலை குறித்த அறிக்கை

February 6 , 2024 164 days 219 0
  • சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது தேசிய பனிச் சிறுத்தைகள் கணக்கெடுப்பு ஆனது இந்தியாவில் 718 பனிச் சிறுத்தைகள் இருப்பதாக கண்டறிந்துள்ளது.
  • தற்போது உலகில் உள்ள மொத்த பனிச்சிறுத்தைகளில்,  இந்தியாவில் சுமார் 10-15% பனிச் சிறுத்தைகள் காணப்படுகின்றன.
  • இது குறித்த முந்தைய மதிப்பீடுகள் ஆனது, இந்தியாவில் 400 முதல் 700 வரையிலான பனிச் சிறுத்தைகள் இருந்ததாக கூறுகின்றன.
  • வெவ்வேறு மாநிலங்களில் மதிப்பிடப்பட்ட எண்ணிக்கைகள் பின்வருமாறு: லடாக் 477, உத்தரகாண்ட் 124, இமாச்சலப் பிரதேசம் 51, அருணாச்சலப் பிரதேசம் 36, சிக்கிம் 21, மற்றும் ஜம்மு காஷ்மீர் 9 ஆகியனவாகும்.
  • IUCN அமைப்பானது பனிச் சிறுத்தைகளை எளிதில் பாதிக்கப்படக்கூடிய இனங்கள் என்ற பிரிவின் கீழ் வகைப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்