TNPSC Thervupettagam

இந்தியாவில் ஒரே நேரத்தில் தேர்தல்

September 24 , 2024 5 days 100 0
  • இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான கோவிந்த் குழுவின் அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ‘ஒருமனதாக’ ஒப்புதல் அளித்துள்ளது.
  • மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி நிலைகளில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு ஏதுவாக சில அரசியலமைப்புத் திருத்தங்களை மேற்கொள்வதற்கான ஒரு தொடர் பரித்துரையினை அந்தக் குழு பரிந்துரைத்துள்ளது.
  • ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற அந்தத் திட்டமானது இரண்டு அரசியலமைப்பு திருத்த மசோதாக்களைப் பாராளுமன்றத்தினால் நிறைவேற்ற கோருகிறது.
  • ஒரே நேரத்தில் அனைத்து தேர்தல்களையும் நடத்தும் முறைக்கு மாறுவதற்கான முதல் அரசியலமைப்பு திருத்த மசோதாவிற்கு மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரண்டிலும் 'சிறப்பு பெரும்பான்மை' தேவையாகும்.
  • இரண்டாவது அரசியலமைப்பு திருத்த மசோதாவானது அனைத்து உள்ளாட்சித் தேர்தல்களும் (நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு) ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப் பட்ட 100 நாட்களுக்குள் நடைபெறுவதை உறுதி செய்யும்.
  • இதற்காக, நாட்டில் உள்ள மாநிலங்களில் பாதிக்கும் குறையாத மாநிலங்களின் சட்ட மன்றங்களால் இந்த சட்டத்திருத்தம் அங்கீகரிக்கப்பட வேண்டும் (ஒப்புக் கொள்ளப் பட வேண்டும்).
  • "உள்ளாட்சி அரசு" ஆனது ஏழாவது அட்டவணையில் உள்ள மாநிலப் பட்டியலின் கீழ் ஒரு கூறாக இருப்பதால், இந்த விவகாரத்தில் சட்டங்களை இயற்றும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு மட்டுமே உள்ளது.
  • கோவிந்த் குழுவால் முன்மொழியப்பட்ட இத்திட்டம் ஆனது, ஒரு மாநிலச் சட்டமன்றம் அல்லது மக்களவையானது அதன் ‘முழு’ ஐந்தாண்டு காலம் முடிவதற்குள் கலைக்கப் பட்டால், ‘இடைக்கால’ தேர்தல் நடைபெறும் என்று குறிப்பிடுகிறது.
  • ஆனால், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலச் சட்டமன்றம் அல்லது மக்களவை ஆனது அடுத்த ஒரே நேரத் தேர்தல்கள் நடைபெறுவதற்கு முன்னதாக மீதமுள்ள பதவி காலத்திற்கு மட்டுமே செயல்படும்.
  • இடைக்காலத் தேர்தலுக்கும் திட்டமிடப்பட்ட ஒரே நேரத் தேர்தலுக்கும் இடையிலான இந்தக் காலகட்டம் ஆனது "காலாவதியாகாத காலம்" என்று அறியப்படும்.
  • இந்தியாவின் முதல் நான்கு பொதுத் தேர்தல்களின் போது (1951-52, 1957, 1962, 1967), வாக்காளர்கள் அந்தந்த மாநிலச் சட்டமன்றங்களுக்கும் வாக்களித்தனர்.
  • பின்னர், புதிய மாநிலங்களின் உருவாக்கம் மற்றும் பிற மாநிலங்களை மறு சீரமைப்பு செய்ததன் காரணமாக இந்தச் செயல்முறை முடிவுக்கு வந்தது.
  • 1968-89 ஆம் ஆண்டுகளில், சில (மாநில) சட்டமன்றங்கள் கலைக்கப்பட்டதால், ஒரே தேசம் ஒரே நாடு (ONOE) நடைமுறை முற்றிலும் நிறுத்தப்பட வழிவகுத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்