TNPSC Thervupettagam

இந்தியாவில் கங்கை ஓங்கில்கள்

May 27 , 2024 181 days 237 0
  • இந்திய வனவிலங்கு கழகத்தின் கூற்றுப்படி, தற்போது கங்கை மற்றும் அதன் துணை நதிகளில் சுமார் 4,000 ஓங்கில்கள் உள்ளன.
  • உத்தரப் பிரதேசத்தில் உள்ள கங்கை ஓங்கில்களின் எண்ணிக்கையானது 2,000 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இது இந்தியாவில் காணப்படும் மொத்த கங்கை ஓங்கில்களின் எண்ணிக்கையில் பாதிக்கும் மேலான அளவாகும்.
  • உத்தரப் பிரதேசத்தில், ஓங்கில்கள் முக்கியமாக சம்பல் நதியில் காணப்படுகின்றன.
  • கங்கை நதி ஓங்கில்கள் பார்வைத் திறனில்லாத ஓங்கில்கள், கங்கேஸ் சுசு அல்லது அதன் அறிவியல் பெயரில் பிளாட்டானிஸ்டா கங்கேட்டிகா என்றும் அழைக்கப் படுகிறது.
  • இது முக்கியமாக கங்கை நதி மற்றும் அதன் துணை நதிகளான காக்ரா, கோசி, கந்தக், சம்பல், ருப்நாராயண் மற்றும் யமுனை ஆகிய நதிகளின் பெரும் பிரதான நீரோட்டப் பகுதிகளில் காணப்படுகிறது.
  • கங்கை நதி ஓங்கில்கள் 2010 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதியன்று இந்தியாவின் தேசிய நீர்வாழ் விலங்காக அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்