TNPSC Thervupettagam

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மரபணு மாற்ற முறை

August 6 , 2024 110 days 127 0
  • புது டெல்லியில் உள்ள மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி சபையின் (CSIR) மரபணுவியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் கல்வி நிறுவனத்தின் அறிவியலாளர்கள் மேம்படுத்தப்பட்ட மரபணு மாற்ற முறையை உருவாக்கியுள்ளனர்.
  • இது தற்போதுள்ள CRISPR-அடிப்படையிலான தொழில்நுட்பங்களைக் காட்டிலும் அந்த டிஎன்ஏவை மிகவும் துல்லியமாகவும் திறமையாகவும் மாற்றியமைக்கக் கூடியது.
  • ஃபிரான்சிசெல்லா நோவிசிடா பாக்டீரியாவிலிருந்து cas9 (நொதி) என்சைம்களை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
  • FnCas9 என அழைக்கப்படும் இந்த Cas9, மிகவும் துல்லியமானது என்றாலும், இது மிகவும் குறைந்த செயல்திறன் கொண்டது.
  • FnCas9 நொதிகளை, அதன் தனித்தன்மையை இழக்கச் செய்யாத வகையில் மிக நன்கு மேம்படுத்துவதற்காக வேண்டி அதன் புதிய வடிவங்கள் மாற்றியமைக்கப்பட்டு, செயற்கையாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
  • தற்போது, ​​CRISPR-Cas9 நுட்பத்தினைப் பயன்படுத்தி, அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் விலங்குகளின் மரபணுவில் குறிப்பிட்ட DNA வரிசைகளைச் சேர்க்கலாம், அகற்றலாம் அல்லது மாற்றியமைக்கலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்