TNPSC Thervupettagam

இந்தியாவில் காணப்படும் புவிவெப்ப ஆற்றல் வளங்கள் 2024

August 14 , 2024 104 days 145 0
  • இந்தியா தோராயமாக சுமார் 10,600 மெகாவாட் திறன் கொண்ட புவிவெப்ப ஆற்றல் வளங்களைக் கண்டறிந்துள்ளது.
  • இந்தியப் புவியியல் ஆய்வகமானது (GSI), ‘இந்தியாவின் புவிவெப்ப ஆற்றல் வளம் குறித்த வரைபடம், 2022’ என்ற அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • தெலுங்கானாவின் சிங்கரேணி காலியரீஸ் கம்பெனி லிமிடெட் (SCCL) நிறுவனத்தினால் 20 கிலோவாட் திறன் கொண்ட புவிவெப்ப மின்னாற்றல் உற்பத்தி நிலையம் ஆனது சோதனை முறையில் தொடங்கப்பட்டது.
  • புவிவெப்ப ஆற்றல் என்பது புவியினுள் உருவாக்கப்பட்டு சேமிக்கப்படும் புதுப்பிக்கத் தக்க வெப்ப ஆற்றலாகும்.
  • பொதுவாக புவி வெப்பத் தொழில்நுட்பம் ஆனது இந்த ஆற்றல் அல்லது வெப்பத்தினை வெப்பம் ஆக்குவதற்கும் குளிரூட்டுவதற்கும் பயன்படுத்துவதற்காக என்று அதனை நேரடியாக பிரித்தெடுக்கிறது அல்லது அதனை மின்சாரமாக மாற்றுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்