TNPSC Thervupettagam

இந்தியாவில் குற்றங்கள் குறித்த அறிக்கை

October 2 , 2020 1515 days 695 0
  • தேசியக் குற்ற ஆவணக் காப்பகமானது இந்தியாவில் குற்றங்கள் 2019” என்ற ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கையின் படி, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலக் கட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களானது 7.3% என்ற அளவில் அதிகரித்துள்ளது.

மேற்கோள்கள்

  • உத்தரப்பிரதேச மாநிலமானது, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பட்டியல் வகுப்பினருக்கு எதிரான குற்றங்கள் ஆகிய 2 பிரிவுகளிலும் அதிக எண்ணிக்கையிலான குற்ற நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளது.
  • மேலும், உத்தரப் பிரதேசமானது போக்சோ  சட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளுக்கு எதிரான அதிக எண்ணிக்கையிலான குற்றங்களைப் பதிவு செய்துள்ளது. இதற்கு அடுத்து மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இது குறித்து அதிக எண்ணிக்கையிலான குற்றங்களைப் பதிவு செய்துள்ளன.
  • உத்தரப் பிரதேசமானது அதிக எண்ணிக்கையிலான அமில வீச்சு செயல்களைக் கொண்டுள்ளது. இதற்கு அடுத்து மேற்கு வங்காளமானது அதிக அளவிலான அமில வீச்சு செயல்களைக் கொண்டுள்ளது.
  • உத்தரப் பிரதேசமானது அதிக எண்ணிக்கையிலான பட்டியல் இனத்தவருக்கு எதிரான குற்றங்களைக் கொண்டுள்ளது. இதற்கு அடுத்து இராஜஸ்தான், பீகார் ஆகியவை அதிக அளவிலான பட்டியல் இனத்தவருக்கு எதிரான குற்றங்களைக் கொண்டுள்ளது.
  • மேலும் உத்தரப் பிரதேசமானது அதிக அளவிலான வரதட்சணை நிகழ்வுகளைக் கொண்டுள்ளது. இதற்கு அடுத்து பீகார் அதிக அளவிலான வரதட்சணை நிகழ்வுகளைக் கொண்டுள்ளது.
  • அசாம் ஆனது பெண்களுக்கு எதிரான அதிக குற்ற விகிதங்களைக் கொண்டுள்ளது.
  • இராஜஸ்தான் ஆனது பட்டியல் இனத்தவருக்கு எதிரான அதிகக் குற்ற விகிதத்தைக் கொண்டுள்ளது.
  • 2018 ஆம் ஆண்டில், குற்ற விகிதமானது 58.8% ஆக இருந்தது. இது 2019 ஆம் ஆண்டில் 62.4% ஆக அதிகரித்துள்ளது.
  • தலித் பெண்களுக்கு எதிரான அதிக எண்ணிக்கையிலான வன்புணர்வு விகிதமானது இராஜஸ்தான் மாநிலத்தில் பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்த உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக அளவு வன்புணர்வு நிகழ்வுகள் பதிவாகியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்