TNPSC Thervupettagam

இந்தியாவில் குழந்தை திருமணம் பற்றிய லான்செட் இதழின் ஆய்வறிக்கை

January 13 , 2024 189 days 223 0
  • இந்தியாவில் குழந்தைத் திருமணம் குறித்து லான்செட் இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வறிக்கை, நாடு முழுவதும் குழந்தைத் திருமணம் குறைந்து வருவதைக் குறிப்பிடுகிறது.
  • ஆனால் முக்கியமாக பெண் குழந்தைகள் மத்தியில் நிகழும் குழந்தைத் திருமணங்களின் மொத்த எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்டவை நான்கு மாநிலங்களில் பதிவானதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
  • அவை பீகார் (16.7%), மேற்கு வங்காளம் (15.2%), உத்தரப் பிரதேசம் (12.5%), மற்றும் மகாராஷ்டிரா (8.2%) ஆகும்.
  • ஆண் குழந்தைகள் மத்தியில், குஜராத் (29%), பீகார் (16·5%), மேற்கு வங்காளம் (12.9%) மற்றும் உத்தரப் பிரதேசம் (8.2%) ஆகிய மாநிலங்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமான எண்ணிக்கைகளைக் கொண்டுள்ளன.
  • இந்தியாவில் இன்றுவரையில் ஐந்தில் ஒரு பெண் குழந்தைகளுக்கும், ஆறில் ஒரு ஆண் குழந்தைகளுக்கும் சட்டப்பூர்வ திருமண வயதுக்கு முன்னதாகவே திருமணம் செய்து வைக்கப் படுகிறார்கள்.
  • பெண் குழந்தைகளின் மத்தியில் நிகழும் குழந்தை திருமணங்களின் எண்ணிக்கையில் 32.3% அதிகரிப்புடன், மிகப்பெரிய அதிகரிப்பு ஆனது மேற்கு வங்காளத்தில் பதிவானது.
  • மேற்கு வங்காளத்தில் 5,00,000க்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகளாக இருக்கும் போதே திருமணம் செய்து வைக்கபடுவதால் அங்கு மிகப்பெரிய அதிகரிப்புப் பதிவாகியுள்ளது.
  • மேற்கு வங்காளத்தில் 18 வயதுக்கு முன் திருமணம் செய்து கொண்ட 20 முதல் 24 வரையான வயதுடைய பெண்களின் எண்ணிக்கையானது 41.6% என்ற அளவில் இந்தியாவிலேயே அதிகபட்ச நிலையில் உள்ளது என்று 5 வது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு எடுத்துரைக்கிறது.
  • இந்த சதவீதம் ஆனது, 4 வது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் போது அதே அளவில் இருந்தது.
  • அகில இந்திய அளவில், 18 வயது எட்டுவதற்கு முன்னதாகவே திருமணம் செய்து வைக்கப் பட்ட 20 முதல் 24 வயதுடைய பெண்களின் எண்ணிக்கையானது 23.3% ஆக உள்ளது.
  • 2021 ஆம் ஆண்டில், 2006 ஆம் ஆண்டு குழந்தை திருமணத் தடைச் சட்டத்தின் கீழ் மேற்கு வங்காளத்தில் 105 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
  • இதே காலகட்டத்தில் தமிழ்நாடு மாநிலத்தில் 169 வழக்குகளும், கர்நாடகாவில் 273 வழக்குகளும், அசாமில் 155 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்