TNPSC Thervupettagam

இந்தியாவில் கொசு மீன்களின் தாக்கம்

December 9 , 2023 353 days 316 0
  • கொசுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ள பல்வேறு பகுதிகள் அதன் உள்ளூர் நீர்நிலைகளில் கொசு மீன்களை விடுவித்துள்ளன.
  • கொசு மீன் ஆனது அமெரிக்காவைப் பூர்வீகமாக கொண்டது.
  • 1928 ஆம் ஆண்டில், கம்புசியா, குறிப்பாக கம்புசியா அஃபினிஸ் மற்றும் கம்புசியா ஹோல்ப்ரூக்கி ஆகிய இனங்களானது பிரிட்டிஷ் ஆட்சியின் போது இந்தியாவில்   அறிமுகப்படுத்தப்பட்டது.
  • கொசுப் புழுக்களை (லார்வாக்கள்) உண்பதற்கும், கொசுக்களின் எண்ணிக்கையைக்  கட்டுப்படுத்துவதற்கும் இந்த மீன்களைப் பயன்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
  • ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கொசுமீன்கள் அந்நாட்டின் உள்ளூர் மீன் இனத்தின் அழிவுக்கு வழி வகுத்தன.
  • இந்தியாவில், கொசு மீன்களின் அறிமுகத்தைத் தொடர்ந்து தலைப் பிரட்டைகள் குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • உலக சுகாதார அமைப்பானது, 1982 ஆம் ஆண்டில் கம்பூசியா இனங்களை கொசுக் கட்டுப்பாட்டுக் காரணிகளாகப் பயன்படுத்தப் பரிந்துரைப்பதை நிறுத்தியது.
  • மேலும் 2018 ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கத்தின் தேசியப் பல்லுயிர் ஆணையம் ஆனது அஃபினிஸ் மற்றும் கம்புசியா ஹோல்ப்ரூக்கி ஆகியவற்றை அயல்நாட்டு ஆக்கிரமிப்பு இனங்களாக அறிவித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்