மத்தியப் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகமானது “இந்தியாவில் சுகாதாரம்” என்ற ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் சுகாதாரத் துறை குறித்த அடிப்படையான அளவு சார்ந்த தகவலைத் திரட்டுவது என்பது இதன் முக்கிய நோக்கமாகும்.
இதன் படி, பார்சி சமூகமானது உடல் பாதிப்பிற்கு எளிதில் (31.1%) உள்ளாகக் கூடியவர்களாக உள்ளனர்.
இதர சமூகங்களுக்கான இந்த எண்ணிக்கை ஆனது சமணர்கள் 11.2%, சீக்கியர்கள் 11%, கிறிஸ்துவர்கள் 10.5%, முஸ்லீம்கள் 8.1%, பவுத்தர்கள் 8%, இந்துக்கள் 7.2% என்று உள்ளது.
இந்த ஆய்வின்படி ஏறத்தாழ 7.5% இந்தியர்கள் உடல் பாதிப்பிற்கு உள்ளாகக் கூடியவர்களாக உள்ளனர்.