நிதி ஆயோக் ஆனது இந்தியாவில் சுடர்க்கரி நீக்கல் முறை போக்குவரத்துத் திட்டத்தைத் தொடங்க இருக்கின்றது.
இந்தத் திட்டமானது சர்வதேசப் போக்குவரத்து மன்றத்துடன் (ITF - International Transport Forum) இணைந்து மேற்கொள்ளப் படுகின்றது.
இது நாட்டில் போக்குவரத்தின் காரணமாக ஏற்படும் கார்பன் டை ஆக்ஸைடின் உமிழ்வைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியாவின் சுடர்க்கரி நீக்கல் முறை போக்குவரத்து முன்னெடுப்பானது DTEE (Decarbonising Transport in Emerging Economies) என்ற திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
DTEE என்பது வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் சுடர்க்கரி நீக்கல் முறை போக்குவரத்து என்பதைக் குறிக்கின்றது.
DTEE என்பது அர்ஜென்டினா, மொராக்கோ, மற்றும் அசர்பைஜான் ஆகிய பங்கேற்பாளர்களைக் கொண்ட ITFன் ஒரு திட்டமாகும்.
ITF என்பது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்புடன் உள்ள அரசாங்கங்களுக்கிடையேயான ஒரு அமைப்பாகும்.