சமீபத்தில் “இந்தியாவில் சுற்றுச்சூழலின் நிலை குறித்த புள்ளிவிவரங்கள் – 2020” என்ற ஒரு அறிக்கையானது அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தினால் வெளியிடப் பட்டுள்ளது.
இந்த அறிக்கையானது நீடித்த வளர்ச்சி, கால்நடைகள், வனங்கள், நீர், கழிவுகள், காற்று, நிலம், வன விலங்குகள் மற்றும் இதர இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் சார்ந்த குற்றங்கள் மற்றும் உலகளாவியப் பொருளாதார அபாயங்கள் ஆகியவற்றின் நிலையை விவரிக்கின்றது.
இதன் படி, 2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் நிகழ்ந்த உள்ளக இடப்பெயர்வுகள் உலகில் நிகழ்ந்த மிக உயரிய இடப்பெயர்வாகும்.
இந்த உள்ளக இடப்பெயர்வுகள் பேரிடர்கள் மற்றும் வெள்ளம், புயல் & வறட்சி போன்ற கடுமையான வானிலைகளினால் ஏற்பட்டுள்ளது.