இந்தியாவில் தட்டம்மை தடுப்பூசி பெற தகுதி பெற்ற குழந்தைகளில் சுமார் 12 சதவீதம் குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட இரட்டை தவணை தடுப்பூசிகளைப் பெறவில்லை.
இது நோய்த்தடுப்புப் பரவலில் ஏற்பட்டுள்ள "இடைவெளியைப் பற்றிய" குறிப்பினை அளிக்கிறது.
தகுதிப் பெற்ற குழந்தைகளில் சுமார் 30 சதவீதம் பேர் தட்டம்மை வைரசிற்கு எதிரான தடுப்பூசியை (MCV1) மட்டுமே பெற்றுள்ளனர் என்று குழு கண்டறிந்துள்ளது.
சுமார் 60 சதவீதம் பேர் முழுமையாக நோய்த்தடுப்பினைப் (MCV2) பெற்றுள்ளனர்.
வடகிழக்கு மாநிலங்களில் எந்தவொரு தவணையினையும் பெறாத குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக ஆய்வு முடிகள் காட்டுகின்றன என்ற நிலையில் இதில் 26 சதவீதத்துடன் நாகாலாந்து மிகப்பெரியப் பங்கினைக் கொண்டுள்ளது.
இதில் மிகக் குறைந்த அளவாக 4.6 சதவீதப் பங்கினை தமிழ்நாடு கொண்டுள்ளது.