TNPSC Thervupettagam

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மடிக்கணினிகள்

January 16 , 2025 6 days 62 0
  • சிர்மா SGS டெக்னாலஜி நிறுவனத்தின் ஒரு அதிநவீன மடிக்கணினி ஒருங்குசேர்ப்பு மையமானது சென்னையில் திறக்கப்பட்டுள்ளது.
  • இந்த முன்னெடுப்பானது தகவல் தொழில்நுட்ப வன்பொருளுக்கான PLI 2.0 திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
  • தமிழ்நாட்டில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் (MeitY) பல்வேறு திட்டங்களின் கீழ் 47க்கும் மேற்பட்ட உற்பத்தி அலகுகளுக்கு ஆதரவளிக்கப் படுகின்றன.
  • PLI 2.0 என்ற திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட 27 அலகுகளில் ஏழு அலகுகள் தமிழக மாநிலத்தில் அமைந்துள்ளன.
  • தமிழ்நாடு இன்றுவரையில் 1.3 லட்சம் கோடி ரூபாய்க்கு மேலான மதிப்பிலான மொத்த உற்பத்தி இலக்கினை அடைந்துள்ளதோடு மேலும் இந்தியாவின் ஏற்றுமதியில் 30% பங்கினைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்