இந்தியாவில் 1990 முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் தற்கொலை காரணமான உயிர் இழப்புகளின் விகிதத்தில் 30 சதவீதத்திற்கும் சரிவு பதிவாகியுள்ளது.
இந்தியாவில் தற்கொலை காரணமான உயிரிழப்பு விகிதம் ஆனது, 1990 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் மக்களுக்கு 18.9 ஆக இருந்தது.
2019 ஆம் ஆண்டில் இது ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 13.1 லட்சமாகவும், 2021 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 13 ஆகவும் இருந்தது.
இந்தியாவில் 1990 முதல் 2021 ஆம் ஆண்டு வரையில், தற்கொலை காரணமான உயிர் இழப்பு விகிதம் 31.5 சதவீதமாகக் குறைந்துள்ளது.
தற்கொலையால் ஏற்படும் உயிரிழப்பு விகிதங்கள் ஆனது, ஆண்களை விட பெண்கள் மத்தியில் அதிகமாகக் காணப்படுகின்றன.
1990 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு சுமார் 16.8 ஆக இருந்த பெண்களின் தற்கொலை உயிரிழப்பு விகிதம் ஆனது, 2021 ஆம் ஆண்டில் சுமார் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 10.3 ஆக குறைந்துள்ளது.
உலகளவில், ஆண்டுதோறும் சுமார் 740,000 தற்கொலைகள் பதிவாகின்றன என்று ஒரு ஆய்வு சுட்டி காட்டுகிறது.
அதாவது, சராசரியாக ஒவ்வொரு 43 வினாடிகளுக்கும் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார்.
கடந்த 30 ஆண்டுகளில், வயதிற்கு ஏற்பச் சீரமைக்கப்பட்ட உலகளாவிய உயிரிழப்பு விகிதம் ஆனது சுமார் 40 சதவீதம் குறைந்துள்ளது.