TNPSC Thervupettagam

இந்தியாவில் தீவிர வறுமையில் உள்ள மக்கள்

March 8 , 2024 134 days 229 0
  • உலக வறுமைக் கடிகாரம் என்ற கணக்கெடுப்பின் படி, இந்தியா தனது மக்கள் தொகையில் தீவிர வறுமையில் உள்ள மக்களின் எண்ணிக்கையினை சுமார் 3 சதவீதத்திற்கும் கீழாக குறைத்துள்ளது.
  • உலக வறுமைக் கடிகாரம் கணக்கெடுப்பு ஆனது, 2030 ஆம் ஆண்டு வரையில் உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டின் நிகழ் நேர வறுமை குறித்த மதிப்பீடுகளை வழங்குகிறது.
  • இந்தக் கணக்கெடுப்பு ஆனது, ஒரு நாளுக்கு 2.15 டாலர் வருமானத்தினை ஈட்டும் பிரிவினரைக் கண்டறிந்து இந்தத் தகவல்களை வழங்கியுள்ளது.
  • அதன்படி, 2022 ஆம் ஆண்டில் சுமார் 4.69 கோடி தீவிர வறுமையில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கையானது 2024 ஆம் ஆண்டில் சுமார் 3.44 கோடி ஆக குறைந்துள்ளதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
  • மொத்த மக்கள்தொகையில், 2022 ஆம் ஆண்டில் சுமார் 3.3 சதவீதமாக இருந்த தீவிர வறுமையில் வாழும் மக்களின் எண்ணிக்கையானது 2.4 சதவீதமாகக் குறைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்