இந்தியாவில் சராசரி வருடாந்திர தலா நீர் கிடைப்பானது 2001 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 1820 கன மீட்டரிலிருந்து 2011 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 1545 கன மீட்டராகக் குறைந்துள்ளது.
இது மேலும் 2025 ஆம் ஆண்டில் 1341 அளவாகவும் 2050 ஆம் ஆண்டில் 1140 என்ற அளவாகவும் குறைய இருக்கின்றது.
தனது 2018 ஆம் ஆண்டு அறிக்கையில், நீர் மற்றும் துப்புரவு ஆர்வலக் குழுவான “வாட்டர் எய்டு” என்ற அமைப்பானது வீடுகளுக்குச் சென்று தூய்மையான நீரை வழங்குவதில் மிகவும் மோசமாகச் செயல்படும் முதல் 10 நாடுகளில் இந்தியாவை முதலிடத்தில் தரவரிசைப் படுத்தியுள்ளது.
1700 கன மீட்டர்களுக்குக் குறைவான வருடாந்திர தலா நீர் கிடைப்பானது நீர்ப் பிரச்சினை உள்ள நிலையாகக் கருதப்படுகின்றது.
1000 கன மீட்டர்களுக்குக் குறைவான வருடாந்திர தலா நீர் இருப்பானது நீர்ப் பற்றாக்குறை உள்ள நிலையாகக் கருதப்படுகின்றது.