TNPSC Thervupettagam

இந்தியாவில் நைட்ரஜன் ஆய்வுக்கு ஐக்கிய ராச்சியம் உதவி

January 28 , 2019 2034 days 609 0
  • இந்தியா மற்றும் தெற்காசியாவில் நைட்ரஜன் மாசுபாட்டை ஆய்வு செய்வதற்கான ஒரு ஆராய்ச்சித் திட்டத்தை ஐக்கிய ராச்சிய அரசு அறிவித்துள்ளது.
  • புதிய கூட்டாண்மைத் திட்டத்தின் கீழ் தெற்காசிய நைட்ரஜன் மையமானது ஐக்கிய ராச்சியத்தின் சூழலியல் மற்றும் நீரியலுக்கான மையத்தின் தலைமையில் செயல்படும்.
  • நைட்ரஜன் மதிப்பீட்டை நிறைவு செய்த ஒரே தெற்காசிய நாடாக இந்தியா உள்ளது. தற்பொழுது இந்தியா ஐ.நா. சுற்றுச்சூழலுக்கான தெற்காசிய மதிப்பீட்டிற்கு இணைத் தலைமையேற்று வழிநடத்திச்  செல்கிறது.
  • ஐக்கிய ராச்சிய ஆய்வு மற்றும் புத்தாக்கத்திலிருநது வரும் நிதியுடன் இந்த ஐந்தாண்டுத் திட்டம் நிறுவப்பட்டுள்ளது.
  • நைட்ரஜன் மாசுபாடானது வளர்ந்து வரும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் முக்கியமான ஒன்றாகும். மேலும் இது இரசாயன உரங்கள், கால்நடைகள் கழிவு மற்றும் புதைபடிவ எரிபொருட்களை எரித்தல் ஆகியவற்றின் உமிழ்வுகளால் உருவாக்கப்படுகிறது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்