2018ஆம் ஆண்டு மே மாதம் 27ம் தேதி, ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் நிறுவனமும் (United Nations Environment) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (Board of Control for Cricket of India - BCCI) இந்தியாவில் பசுமையான கிரிக்கெட்டை மேம்படுத்த ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் மூலமாக பிசிசிஐ தமது போட்டிகளின் மூலம் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை குறைத்திடும் வகையில் தமது நடவடிக்கைகளை பசுமையாக்கிடும் செயல்களில் கிரிக்கெட் ஆட்டக்காரர்களையும் ரசிகர்களையும் ஈடுபடுத்தும்.
மேலும் பிசிசிஐ நாடு முழுவதும் மைதானங்களில் ஒற்றை உபயோக நெகிழி (பிளாஸ்டிக்) பொருட்களை முற்றிலுமாக நீக்குவதையும் திட்டமிட்டுள்ளது.