TNPSC Thervupettagam

இந்தியாவில் பயில்வோம் திட்டம்

May 5 , 2018 2399 days 717 0
  • இந்தியாவில் உயர்கல்வி பயில்வதற்கு வெளிநாட்டு மாணவர்களை கவர்வதற்காக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகமானது (Ministry of Human Resources Development -HRD) மத்திய வெளியுறவு விவகாரத்துறை அமைச்சகத்துடன் (Ministry of External Affairs) கூட்டிணைந்து“ இந்தியாவில் பயில்வோம்” (Study in India) திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.
  • இந்த திட்டமானது, மலேசியா, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தொடங்கப்பட்டுள்ள திட்டங்களை ஒத்ததாகும்.
  • இந்த திட்டமானது இந்தியாவில் உயர்கல்வி பயிலும் தகுதி வாய்ந்த மெச்சத்தகு (meritorious) வெளிநாட்டு மாணவர்களுக்கு கல்வி கட்டணத் தள்ளுபடியும் (fee waiver), கல்வி ஊக்கத் தொகையையும் வழங்கும்.
  • ருவாண்டா, பூடான், வங்கதேசம், இலங்கை, குவைத், ஈரான், தாய்லாந்து, எகிப்து, மலேசியா, நைஜீரியா, கஜகஸ்தான், சவூதி அரேபியா, வியட்நாம், நேபாளம் உட்பட 30 நாடுகளிலிருந்து, முதன்மையாக ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வெளிநாட்டு மாணவர்களை இந்தியாவில் உயர்கல்வி பயில கவருவதற்கு இத்திட்டம் இலக்கினை நிர்ணயித்துள்ளது,
  • இந்தியாவில் பயில்வோம் திட்டத்தின் தொடக்கத்தின் மூலம் 2022-ல்5 லட்சம் முதல் 2 லட்சம் வரை சர்வதேச மாணவர்களை இந்தியாவில் உயர்கல்வி பயில கவருவதற்கு இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.
  • தற்சமயம் நடப்பில், இந்திய அரசானது இந்தியாவில் உயர்கல்வியில் 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரையிலான இடங்களை வெளிநாட்டு மாணவர்களுக்கு ஒதுக்குகின்றது,
  • இருப்பினும் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இந்த ஒதுக்கீட்டுகூறு பெரிதும் பயன்படுத்தப்படாத நிலையிலேயே காணப்படுகின்றது.
  • நடப்பில் இந்தியாவில் 45000 சர்வதேச மாணவர்கள் பயில்கின்றனர். இது உலகளாவிய கல்விக்கான மாணவர்களின் நாடுகடந்த இடப்பெயர்வில் வெறும் 1 சதவீதமே ஆகும்,
  • இந்தியக் கல்வி நிறுவனங்கள் மிகக்குறைந்த சர்வதேச தரவரிசையைக் கொண்டிருப்பதே இதற்கான முக்கிய காரணமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்