TNPSC Thervupettagam

இந்தியாவில் பறவைக் காய்ச்சல் திடீர்ப் பெருக்கம்

January 13 , 2021 1287 days 637 0
  • இந்தியாவில் பறவைக் காய்ச்சலானது இமாச்சலப் பிரதேசத்தில் காட்டு வாத்துகள், கேரளாவில் வாத்துகள், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் காகங்கள் ஆகிய உயிரினங்களில் பதிவாகியுள்ளது.
  • இது ஹரியானாவிலும் காணப்பட்டுள்ளது.
  • பறவைக் காய்ச்சல் என்பது இன்ஃப்ளூயன்ஸா வகை ஏ வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும்.
  • இன்ஃப்ளூயன்ஸா வகை ஏ வைரஸில் பல வகைகள் உள்ளன.
  • எச்5என்1 திரிபு ஆனது மனிதர்களுக்குத் தொற்றும் முதல் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் ஆகும்.
  • உலக சுகாதார அமைப்பின் கூற்றுப் படி, எச்5என்1 ஆனது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுவதில்லை.
  • இந்த வைரஸானது வெப்பத்தின் காரணமாக அதிக உணர்திறன் கொண்டுள்ளது மற்றும் சமையல் வெப்பநிலையில் இது இறக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்